மேலும் 3 ரபேல் இந்தியா வருகை

தினகரன்  தினகரன்
மேலும் 3 ரபேல் இந்தியா வருகை

புதுடெல்லி: இந்திய விமானப்படையை வலுப்படுத்தவும், நவீனப்படுத்தவும் ரூ.58 ஆயிரம் கோடியில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க பிரான்ஸ் நிறுவனத்துடன் இந்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. முதல் கட்டமாக கடந்தாண்டு ஜூலை 29ம் தேதி 5 விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்தன. தொடர்ந்து, நவம்பரில் 3 விமானங்களும், இந்தாண்டு ஜனவரி 3 விமானங்களும் வந்தன. இந்நிலையில், மேலும் 3 ரபேல் விமானங்கள் நேற்று இந்தியா வந்துள்ளன. இதுவரையில் 7 கட்டங்களாக 24 ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அடுத்த சில மாதங்களில் மேலும் விமானங்கள் வரும் என இந்தியா எதிர்பார்க்கிறது.

மூலக்கதை