மகாராஷ்டிராவில் கொரோனா கணக்கில் குளறுபடி ஒரே நாளில் 3,998 பேர் பலி: பாதிப்பு எண்ணிக்கையும் 11,922 அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவில் கொரோனா கணக்கில் குளறுபடி ஒரே நாளில் 3,998 பேர் பலி: பாதிப்பு எண்ணிக்கையும் 11,922 அதிகரிப்பு

புதுடெல்லி: மகாராஷ்டிரா அரசு செய்த குளறுபடியால் ஒரே நாளில் கொரோனா பலி \r எண்ணிக்கை 3,998 ஆக உயர்ந்தது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை பல்வேறு \r மாநிலங்களில் குறைந்து வருவதால், இயல்பு நிலை திரும்பி வருகிறது. 2 \r மாநிலங்களில் மட்டுமே 2000க்கும் மேல் தினசரி பாதிப்பு உள்ளது. 30க்கும் \r மேற்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 2000க்கும் கீழ் தினசரி \r பாதிப்பு பதிவாகி உள்ளது. இந்நிலையில், சில மாநிலங்களில் தனியார் \r மருத்துவமனைகளில் இருந்து பெறப்படும் பாதிப்பு, பலி எண்ணிக்கை முறையாக \r பதிவு செய்யப்படாததால், மொத்த எண்ணிக்கையில் அடிக்கடி குளறுபடிகள் \r ஏற்படுகின்றன. நாடு முழுவதும் நேற்று முன்தினம் 374 பேர் மட்டுமே \r தொற்றால் இறந்தனர். ஆனால், நேற்று இந்த எண்ணிக்கை 3,998 ஆக உயர்ந்தது. \r மகாராஷ்டிராவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த சில \r நாட்களில் பதிவான பலி எண்ணிக்கை சரியாக கணக்கிடப்படவில்லை. நேற்று இந்த \r கணக்கு சரி செய்யப்பட்டதால், விடுப்பட்ட பலிகள் நேற்றைய எண்ணிக்கையில் \r சேர்க்கப்பட்டன. இதனால், பலி எண்ணிக்கை நேற்று கணிசமாக உயர்ந்தது. நாடு \r முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 42,015 பேர் கொரோனா தொற்றால் \r பாதித்துள்ளனர். இது, நேற்று முன்தினத்துடன் (30,093) ஒப்பிடுகையில் 11,922\r கூடுதலாகும். மொத்த பாதிப்பு எண்3 கோடியே 12 லட்சத்து 16 ஆயிரத்து 337 ஆக \r உயர்ந்துள்ளது. * முதல் முறை அல்லபீகாரிலும் கடந்த ஜூன் 10ம் \r தேதி இதே போன்ற குளறுபடி ஏற்பட்டது. அன்றைய தினம் இம்மாநிலத்தில் 4,005 \r பேர் பலியானதாக கூறப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் 15 நாட்களாக \r இறந்தவர்களின் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யாததால் இந்த குளறுபடி \r ஏற்பட்டது. இதனால், அன்றைய தினம் ஒரு நாளில் நாடு முழுவதும் பலியானோர் \r எண்ணிக்கை 6,148 ஆக பதிவானது.

மூலக்கதை