கொரோனா செய்யும் கொடுமை இறக்கும் நிலையில் பாச கணவன் குழந்தை பெற துடிக்கும் மனைவி: ஆசையை நிறைவேற்ற ஐகோர்ட் முயற்சி

தினகரன்  தினகரன்
கொரோனா செய்யும் கொடுமை இறக்கும் நிலையில் பாச கணவன் குழந்தை பெற துடிக்கும் மனைவி: ஆசையை நிறைவேற்ற ஐகோர்ட் முயற்சி

அகமதாபாத்: குஜராத் உயர் நீதிமன்றத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஒருவரின் மனைவி அவசர மனு தாக்கல் செய்தார். அதில், ‘எனது கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, செயற்கை சுவாசக் கருவியுடன் சிகிச்சை பெறுகிறார். அவர் உயிர் பிழைக்க குறைந்த வாய்ப்பே இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனக்கு அவர் மூலமாக குழந்தை பெற வேண்டும் என்ற ஆசை உள்ளதால், நான் செயற்கை முறையில் கருத்தரிக்க அவருடைய விந்தணுவை சேகரித்து தரும்படி மருந்துவமனைக்கு உத்தரவிட வேண்டும்,’ என்று கூறியுள்ளார். இந்த வழக்கை மிக மிக அவசரம் என கருதி நீதிபதி அசுதோஸ் சாஸ்திரி விசாரித்தார். அப்போது, ‘நோயாளியின் மனைவி செயற்கை முறையில் கருத்தரிக்க ஆசைப்படுவதால், உடல் நிலை மோசமடைந்து வரும் அவரது கணவரின் விந்தணுவை எடுத்து, வதோதராவில் உள்ள மருத்துவமனையில் பாதுகாப்பாக சேமித்து வைக்க வேண்டும்,’ என இடைக்கால உத்தரவை பிறப்பித்தார்.

மூலக்கதை