கொரோனாவை தொடர்ந்து அடுத்த பீதி பறவை காய்ச்சல் தாக்கி அரியானா சிறுவன் பலி

தினகரன்  தினகரன்
கொரோனாவை தொடர்ந்து அடுத்த பீதி பறவை காய்ச்சல் தாக்கி அரியானா சிறுவன் பலி

புதுடெல்லி: இந்தாண்டு தொடக்கத்தில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அரியானா, சட்டீஸ்கர் மாநிலங்களில் பறவை காய்ச்சலால் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்தன. இந்த பறவை காய்ச்சல் எச்5என்1 வைரசில் இருந்து பரவுகிறது. இந்த வைரஸ் தாக்கிய அரியானா மாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுவன், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 2ம் தேதி அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தான். அவன் சிகிச்சை பலனின்றி நேற்று டெல்லியில் இறந்தான். ஏற்கனவே, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பறவை காய்ச்சலால் மேலும் ஆபத்து ஏற்படுமா என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  

மூலக்கதை