பாகிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரை வென்றது இங்கிலாந்து

தினகரன்  தினகரன்
பாகிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரை வென்றது இங்கிலாந்து

மான்செஸ்டர்: பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து, 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, ஒருநாள் தொடரில் 0-3 என ஒயிட்வாஷ் படுதோல்வியை சந்தித்தது. டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் 31 ரன் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான், 2வது டி20ல் 45 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதை முடிவு செய்யும் 3வது போட்டி மான்செஸ்டரில் நடந்தது. டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் 20 ஒவரில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன் குவித்தது. தொடக்க வீரர் ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 76* ரன் (57பந்து, 5பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். இங்கிலாந்து தரப்பில் ரஷித் 4, மொயீன் ஒரு விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 19.4 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியிலும் தொடக்க வீரர் ஜேசன் ராய் 64 ரன் (36 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். டேவிட் மலான் 31 (33பந்து, 2பவுண்டரி), கேப்டன் மோர்கன் 21 ரன் (12 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) சேர்த்தனர். பாக். தரப்பில் ஹபீஸ் 3,  இமத் வாசிம், ஹசன் அலி, உஸ்மான் காதிர், ஷதாப் கான் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இங்கிலாந்து வீரர்கள்  ஜேசன் ராய் ஆட்ட நாயகனாகவும், லயம் லிவிங்ஸ்டோன் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். டி20 தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் வசப்படுத்தியது.

மூலக்கதை