தடை செய்யப்பட்ட செயலிகளை சீன கல்வி நிறுவனங்கள் பதிவிறக்கம் செய்ய வலியுறுத்துவதால் இந்திய மாணவர்கள் பாதிப்பு

தினகரன்  தினகரன்
தடை செய்யப்பட்ட செயலிகளை சீன கல்வி நிறுவனங்கள் பதிவிறக்கம் செய்ய வலியுறுத்துவதால் இந்திய மாணவர்கள் பாதிப்பு

பீஜிங்: தடை செய்யப்பட்ட செயலிகளை சீன கல்வி நிறுவனங்கள் பதிவிறக்கம் செய்ய வலியுறுத்துவதால் இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை சேர்ந்த 20,000 மருத்துவ மாணவர்கள் உட்பட 23,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் சீனாவில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் படித்து வருகின்றனர்.கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியா திரும்பிய மாணவர்கள் ஆன்லைன் மூலம் தங்களது படிப்பை தொடர்ந்து வருகின்றனர். இதனிடையே லடாக் எல்லையில் மோதலுக்கு பிறகு கிட்டத்தட்ட 250 சீன செயலிகளை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது.இதில் வீசாட், ஜிங்சாட், சூப்பர்சாட் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்திய சீன பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றன. இதனால் இந்தியாவில் இருந்து படிக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் முதல் 4.5 லட்சம் ரூபாய் வரை கல்விக்காக செலவிடுவதாக இம்மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என சீனாவில் படிக்கும் இந்திய மாணவர்களின் சங்கம் இருநாட்டு அரசுகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மூலக்கதை