விஜய் படம் தான் சூப்பர் : மகேஷ்பாபு ஓப்பன் டாக்

தினமலர்  தினமலர்
விஜய் படம் தான் சூப்பர் : மகேஷ்பாபு ஓப்பன் டாக்

தமிழில் விஜய்யைப்போலவே தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் மகேஷ்பாபு. இவர்கள் இருவருக்குமிடையே திரைக்குப்பின்னால் நல்ல நட்பு இருந்து வருகிறது.மேலும், தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ஒக்கடு, போக்கிரிஆகிய படங்களின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடித்தார். இதில் ஒக்கடு படம் கில்லி என்ற பெயரிலும், தெலுங்கு போக்கிரி படம் தமிழிலும் போக்கிரிஎன்ற பெயரிலேயே உருவானது.

இந்நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில், நான் நடித்த ஒக்கடு படத்தை விட தமிழ் ரீமேக்கான விஜய் நடித்த கில்லி படமே சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளார் மகேஷ்பாபு. தனது படத்தை விட விஜய் படமே சிறப்பாக இருந்ததாக மகேஷ்பாபு சொன்ன இந்த தகவலை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

மூலக்கதை