105 நிமிடங்கள் - ஹன்சிகா கொடுத்த அப்டேட்

தினமலர்  தினமலர்
105 நிமிடங்கள்  ஹன்சிகா கொடுத்த அப்டேட்

தமிழில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற படத்தைப்போலவே தெலுங்கில் ஹன்சிகா நடிப்பில் 105 நிமிடங்கள் என்ற படமும் உருவாகிறது. திரில்லர் கதையில் தயாராகும் இந்த படத்தின் கதை ஒரே வீட்டிற்குள் நடக்கிறது. அதில் ஹன்சிகா ஒருவர் மட்டுமே ஒரே ஷாட்டில் மொத்த படத்திலும் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கப்பட்டிருப்பதாக டுவிட்டரில் தெரிவித்துள்ள ஹன்சிகா, இப்படத்தில் நடிப்பதில் தான் உற்சாகமாக இருப்பதாகவும், படம் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார். இப்படத்தை ராஜூ துசா இயக்க, சாம்.சி.எஸ். இசையமைக்கிறார்.

மூலக்கதை