அமெரிக்காவில் 80% தொற்றுக்கு டெல்டா வைரசே காரணம்: ஆண்டனி பவுசி

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் 80% தொற்றுக்கு டெல்டா வைரசே காரணம்: ஆண்டனி பவுசி

வாஷிங்டன்: அமெரிக்காவில் தற்போது பதிவாகும் கோவிட் தொற்றுகளில் 80 சதவீதத்துக்கும் மேல் டெல்டா வைரசால் ஏற்படுவதாக அமெரிக்க மருத்துவர் ஆண்டனி பவுசி தெரிவித்துள்ளார்.


அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகரான ஆண்டனி பவுசி தெரிவித்து உள்ளதாவது: டெல்டா வகை கோவிட் வைரஸ் மிக மோசமான வைரஸ் என்பது தற்போது தெளிவாகிறது. ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்று பரவுவதை டெல்டா வைரஸ் அதிகப்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக பதிவு செய்யப்படும் கோவிட் தொற்றுகளில் 80 சதவீதத்துக்கும் மேல் டெல்டா வைரசால் ஏற்பட்டுள்ளது.தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு டெல்டா வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய தேவை ஏற்படவில்லை. அந்த அளவுக்கு தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் இதுவரை தடுப்பூசி இலக்கு எட்டப்படாமல் உள்ளது. இதற்கு சமூக ஊடகங்களே காரணம். தடுப்பூசி செலுத்திக்கொள்வதே பாதிப்பில் இருந்து காக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை