அமெரிக்காவில் வேகமாகப் பரவும் காட்டுத் தீ: மீட்புப் பணி தீவிரம்

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் வேகமாகப் பரவும் காட்டுத் தீ: மீட்புப் பணி தீவிரம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் உள்ள காடுகளில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, ப்ரீமாண்ட்-வினேமா தேசிய காட்டில் போர்ட்லாந்திலிருந்து தென்கிழக்கில் 300 மைல்கள் வரை கடந்த ஒரு வாரமாக நீடிக்கும் காட்டுத் தீ பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் கலிபோர்னியா மாகாணத்திலும் காட்டுத் தீ ஏற்பட்டு உள்ளது.



காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு அருகில் 2,000 வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், மேலும் 5,000 வீடுகள் அபாயத்தில் உள்ளன. ஏற்கனவே, 70 வீடுகள் மற்றும் 100 கட்டடங்கள் தீயில் சிக்கி சேதமடைந்துள்ளன. உயிர் சேதம் எதுவும் நிகழவில்லை எனக் கூறப்படுகிறது.

மூலக்கதை