கடற்படை ஹெலிகாப்டர் விற்பனையால் இந்தியாவுடனான ஒத்துழைப்பு மேம்படும்: பென்டகன்

தினமலர்  தினமலர்
கடற்படை ஹெலிகாப்டர் விற்பனையால் இந்தியாவுடனான ஒத்துழைப்பு மேம்படும்: பென்டகன்

வாஷிங்டன்: 'இந்தியாவுக்கு கடற்படை ஹெலிகாப்டர், கண்காணிப்பு விமானத்தை விற்பனை செய்வதால் இரு தரப்பு ஒத்துழைப்பு மேம்படும்' என, அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

பென்டன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்து உள்ளதாவது:


அமெரிக்க கடற்படையிடம் இருந்து, அனைத்து பருவ காலங்களிலும் சிறப்பாக செயல்படக் கூடிய 24 'எம்ஹெச்60ஆர் சீஹாக்' ரக ஹெலிகாப்டர்களை இந்தியக் கடற்படை கடந்த வாரம் பெற்றது. மேலும், 'போயிங் பி8 பொசீடன்' வகை கண்காணிப்பு விமானத்தையும் இந்திய கடற்படை பெற்றுள்ளது.இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது பி8 கண்காணிப்பு விமானத்தை அளிக்கும் முதல் நாடு இந்தியா தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பும் தகவல் பரிமாற்றங்களும் மேம்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.



எம்ஹெச்60ஆர் ரக ஹெலிகாப்டர்களை கடற்படையின் பல்வேறு போர் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முடியும். அவற்றில் ஏவுகணை உள்ளிட்ட பிரத்யேக ஆயுதங்கள் மற்றும் கருவிகளைப் பொருத்திக் கொள்ள முடியும். அந்த ரக ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடமிருந்து வாங்க கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை