மணிக்கு 600 கி.மீ வேகத்தில் பயணிக்கும் அதிவேக ரயில்: தண்டவாளத்தை தொடாமல் காந்த சக்தியில் இயக்கம்

தினகரன்  தினகரன்
மணிக்கு 600 கி.மீ வேகத்தில் பயணிக்கும் அதிவேக ரயில்: தண்டவாளத்தை தொடாமல் காந்த சக்தியில் இயக்கம்

குவிங்டோ: அதிவேகமாக செல்லக்கூடிய காந்த ரயிலை சீனா பொது போக்குவரத்திற்கு அறிமுகம் செய்துள்ளது. மணிக்கு 600 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ரயிலை கடந்த 2019ஆம் ஆண்டு சீனா வடிவமைத்தது. சில மாற்றங்களுடன் அதன் சோதனை ஓட்டத்தை கடந்த ஆண்டு சீனா வெற்றிகரமாக நிறைவு செய்தது.இதற்கு மெக்லேவ் என்று பெயரிட்டுள்ள சீனா நேற்று முறைப்படி அதனை சாங்டாங் மாநிலத்தில் உள்ள குவிங்டோ நகரத்தில் அறிமுகப்படுத்தியது. தண்டவாளத்தை தொடாமல் காந்த சக்தியின் உதவியுடன் இயங்கும் இந்த அதிவேக மெக்லேவ் ரயிலில் 2 பெட்டிகள் முதல் 10 பெட்டிகள் வரை இணைக்கலாம். ஒரு பெட்டியில் சுமார் 100 பேர் பயணிக்க முடியும்.மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்வதன் மூலம் உலகிலேயே அதிவேகமாக செல்லும் தரைவழி வாகனம் மெக்லேவ் ரயில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை