உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 19.22 கோடியைக் கடந்தது: 41.33 லட்சம் பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 19.22 கோடியைக் கடந்தது: 41.33 லட்சம் பேர் உயிரிழப்பு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41.33 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,112,285 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 192,223,471 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 174,921,195 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 80,944 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19.16 கோடியைக் கடந்துள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17.49 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41.33 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.31 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 81 ஆயிரத்து 826-க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மூலக்கதை