டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட்: முதல் போட்டியில் இன்று கோவை-சேலம் அணிகள் மோதல்

தினகரன்  தினகரன்
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட்: முதல் போட்டியில் இன்று கோவைசேலம் அணிகள் மோதல்

சென்னை: தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 போட்டிகள் சென்னையில் இன்று முதல் நடைபெறவுள்ளன. கொரோனா பரவல் காரணமாக, இப்போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு டிஎன்பிஎல் 5வது சீசனில், மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. வீரர்களை தக்க வைத்துக் கொள்வது, விடுவிப்பது, புதிய வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் உள்ளிட்ட பணிகள் கடந்த மாதம் முடிவடைந்தது. இதில் சில அணிகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு போட்டிகள் அனைத்தும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் மட்டுமே நடைபெறுகின்றன. போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஆக.8ம் தேதி வரை லீக் சுற்றில், ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் தலா 2 முறை மோதும். லீக் ஆட்டம் முடிந்த பின்னர் நாக் அவுட் போட்டிகள் நடைபெறும். இறுதிப்போட்டி வரும் ஆக.15ல் நடைபெற உள்ளது. முதல் லீக் போட்டி இன்று இரவு 7.30க்கு துவங்குகிறது. இதில் கோவை அணியை எதிர்த்து சேலம் அணி மோதுகிறது. நாளை நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்,  ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

மூலக்கதை