பாகிஸ்தானுக்கு எதிரான டி20: 45 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

தினகரன்  தினகரன்
பாகிஸ்தானுக்கு எதிரான டி20: 45 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

லீட்ஸ்: இங்கிலாந்து-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தான் வென்ற நிலையில், 2வது போட்டி லீட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து 19.5 ஓவரில் 200 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பட்லர் 59 ரன் (39 பந்து) அடித்தார். பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களே எடுத்தது. இதனால் 45 ரன் வித்தியாசத்தில், இங்கிலாந்து வெற்றி பெற்றது. 16 பந்தில் 36 ரன் அடித்து, பந்துவீச்சிலும் அசத்தி 2 விக்கெட் எடுத்த மொயின்அலி ஆட்டநாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கும் இடையோன கடைசி டி20 போட்டி நாளை நடக்கிறது.

மூலக்கதை