நாட்டின் சட்ட விதிமுறைகள்தான் மேலானது: உங்கள் கொள்கை முக்கியமல்ல: ட்விட்டர் நிறுவனத்துக்கு நாடாளுமன்ற குழு சம்மன்

தினகரன்  தினகரன்
நாட்டின் சட்ட விதிமுறைகள்தான் மேலானது: உங்கள் கொள்கை முக்கியமல்ல: ட்விட்டர் நிறுவனத்துக்கு நாடாளுமன்ற குழு சம்மன்

டெல்லி: இந்திய மண்ணின் சட்ட விதிமுறைகள்தான் மேலானது. நிறுவன கொள்கைகள் அல்ல என்று ட்விட்டர் நிறுவன பிரதிநிதிகளிடம் நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது. விதிமுறைகளை மீறி செயல்பட்ட ட்விட்டர் நிறுவனத்துக்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது என்றும் கேள்வியெழுப்பி உள்ளனர்.\r முக்கியமான கொள்கை முடிவுகளை எதன் அடிப்படையில் எடுக்கிறீர்கள். அதற்கு மேலான அதிகாரம் ட்விட்டர் இந்தியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியதோடு, இதற்கான பதிலை அளிக்க வலியுறுத்தினர். நிலைக்குழு முன்பாக ட்விட்டர் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விரிவான விளக்கத்தை அளிக்க வேண்டும். சமூக வலைதளத்தை தவறாக பயன்படுத்துவதை எவ்விதம் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் விவரிக்க வேண்டும் என்றும் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.\r நிலைக்குழுவின் தலைவராக காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் உள்ளார். இக்குழு ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தவறாக செயல்பட்டதற்காக சம்மன் அனுப்பியுள்ளது. குடிமக்களின் உரிமைகளைக் காக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில், ட்விட்டர் பிரதிநிதிகளின் கருத்துகள் கேட்கப்பட்டன. ட்விட்டர் நிறுவனம் பல்வேறு வழிகளில் விதிமுறைகளை மீறியுள்ளதாக குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த இடைக்கால அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் திரும்பப் பெற்றது.

மூலக்கதை