பணக்காரர்கள் பட்டியலில் அதானி விட்ட இடத்தை பிடிப்பாரா?

தினமலர்  தினமலர்
பணக்காரர்கள் பட்டியலில் அதானி விட்ட இடத்தை பிடிப்பாரா?

புதுடில்லி:‘அதானி’ நிறுவனத்தின் பங்குகள் அண்மையில் தொடர் சரிவை கண்ட நிலையில், அதன் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் சரிவைக் கண்டுள்ளது. இதையடுத்து, அவர் தற்போது வகிக்கும் ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற தகுதியை இழந்து, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

‘போர்ப்ஸ்’ நிறுவன தரவுகளின்படி, அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு, கடந்த 11ம் தேதியன்று, 9.50 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது, 18ம் தேதியன்று, 7.90 லட்சம் கோடி ரூபாயாக சரிந்து உள்ளது. கிட்டத்தட்ட 1.60 லட்சம் கோடி ரூபாய் சரிவு ஏற்பட்டு உள்ளது.

அதானி குழுமத்தில், 43 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கும், மூன்று அன்னிய முதலீட்டாளர்களின் கணக்கு முடக்கப்பட்டதாக வந்த தகவலை அடுத்து, இந்நிறுவன பங்குகள் விலை கடுமையான சரிவைக் கண்டன.இதையடுத்து, இந்த செய்தியை மறுத்து, அதானி குழுமம் அறிக்கை விட்டது.

இருப்பினும் பங்குகளை விற்கும் போக்கு பெருமளவு மட்டுப்படவில்லை. ஒரு சில தரப்பினர், அதானி நிறுவன விளக்கங்களில் முழுமையாக திருப்திஅடையவில்லை. நாளை பங்கு வர்த்தகம் மீண்டும் துவங்கும் நிலையில், அதானி குழும பங்குகள் மீளுமா அல்லது மேலும் சரியுமா என்பது தான், சந்தை முதலீட்டாளர்களிடையே எழும் கேள்வியாக இருக்கிறது.

மூலக்கதை