பாலஸ்தீனத்திற்கு தடுப்பூசி இஸ்ரேல் திடீர் முடிவு

தினமலர்  தினமலர்
பாலஸ்தீனத்திற்கு தடுப்பூசி இஸ்ரேல் திடீர் முடிவு

ஜெருசலேம்:'பாலஸ்தீனத்திற்கு உடனடியாக 10 லட்சம் 'டோஸ்' தடுப்பூசி வழங்கப்படும்' என, இஸ்ரேல் அறிவித்துள்ளது.மேற்காசியாவைச் சேர்ந்த இஸ்ரேலில், பிரதமர் நப்தாலி பென்னட் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது.

நேற்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு கரை மற்றும் காசா பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் 45 லட்சம் பேருக்கு, 10 லட்சம் டோஸ் தடுப்பூசி வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 'பைசர்' நிறுவனத்தின் இந்த தடுப்பூசி உடனடி யாக காலாவதியாகும் வகையைச் சேர்ந்தது. பாலஸ்தீனிய அரசுக்கு, செப்., அல்லது அக்ேடாபரில், பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதை, தற்போது இஸ்ரேலிடம் இருந்து பெறும் தடுப்பூசிக்கு பதிலாக, பாலஸ்தீன அரசு திரும்ப வழங்கும். இது தொடர்பாக இரு தரப்பிற்கும் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் மேற்கு கரை மற்றும் காசாவின் சில பகுதிகள் உள்ளன. அதனால், இப்பகுதி மக்களுக்கு இஸ்ரேல் இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், 1990ம் ஆண்டு ஒப்பந்தத்தை சுட்டிக் காட்டி, இஸ்ரேல் அதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளது. இதன் காரணமாகவே, தற்போது கொடுக்கும் தடுப்பூசிக்கு பதிலாக, சில மாதங்கள் கழித்து பாலஸ்தீன அரசிடம் இருந்து தடுப்பூசியை பெற்றுக் கொள்ள உள்ளது. இஸ்ரேல் மக்கள் தொகை ஒரு கோடி. அங்கு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதை அடுத்து, இதுவரை இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன.

மூலக்கதை