ஈரான் அதிபர் தேர்தல் ரைசிக்கு வெற்றி வாய்ப்பு

தினமலர்  தினமலர்
ஈரான் அதிபர் தேர்தல் ரைசிக்கு வெற்றி வாய்ப்பு

துபாய்:மேற்கு ஆசிய நாடான ஈரானில், அதிபர் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இப்ராஹிம் ரைசிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் அதிபர் ஹசன் ருஹானியின் பதவிக் காலம் முடிந்ததை அடுத்து, புதிய அதிபருக்கான தேர்தல் நேற்று நடந்தது. அதிபர் பதவிக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசி, ரிசர்வ் வங்கி முன்னாள் தலைவர் அப்துல்நாசர் ஹெமட்டி உள்ளிட்ட நால்வர் போட்டியிட்டனர்.

கருத்துக்கணிப்பு

நேற்று காலை ஓட்டுப் பதிவு துவங்கியது. ஈரான் தலைவர் அயதுல்லா அலி கோமேனி, தலைநகர் டெஹ்ரானில் முதல் ஓட்டு போட்டு, ஓட்டுப் பதிவை துவக்கி வைத்தார். கோமேனியின் ஆதரவாளரான இப்ராஹிம் ரைசி, ஒரு மசூதியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச் சாவடியில் ஓட்டு போட்டார். ஈரானில் வசிக்கும் எட்டு கோடி பேரில், 5.90 கோடி பேருக்கு ஓட்டுரிமை உள்ளது. எனினும், இந்த தேர்தலில் ஓட்டுப் பதிவு 42 சதவீத அளவிற்கே இருக்கும் என, கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் அணு ஆயுத பரவல் தடை உத்தரவால், ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.விலைவாசி உயர்வு, பேச்சுரிமையை தடுக்கும் அரசின் அடக்குமுறை போன்றவற்றால், பெரும்பாலான மக்கள் அதிருப்தியில் ஓட்டு போட விரும்ப வில்லை எனக் கூறப்படுகிறது. அத்துடன், சமூக ஆர்வலர்கள் பலர் தேர்தலை புறக்கணிக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தலில் இப்ராஹிம் ரைசி வெற்றி பெற அதிக வாய்ப்புஉள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மரண தண்டனைஇப்ராஹிம் ரைசி, 1988ல் அரசுக்கு எதிரான புரட்சியின் போது, அரசியல் கைதிகள் ஏராள மானோருக்கு மரண தண்டனை வழங்கியவர். அதனால், அமெரிக்கா இவரை தடை செய்யப்பட்டோர் பட்டியலில் சேர்த்துள்ளது.

மூலக்கதை