பீகாரில் மின்னல் தாக்கி 2 சிறுவர் உட்பட10 பேர் பலி

தினகரன்  தினகரன்
பீகாரில் மின்னல் தாக்கி 2 சிறுவர் உட்பட10 பேர் பலி

பாட்னா: பீகாரில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதல் இரவு வரை பலஇடங்களில் மின்னல் தாக்கிய சம்பவங்களில் 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் பலியாகினர். பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் மொகாமா, சிவான், தர்பங்கா, வைசாலி, சமஸ்திபூர், ஆரா உளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. அதில்,  மொகாமாவில் மூன்று பேர், சிவான், தர்பங்காவைச் சேர்ந்த தலா இரண்டு பேரும், வைசாலி, சமஸ்திபூர் மற்றும் ஆராவில் தலா ஒருவர் என, 10 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இதில், கோகுலா கிராமத்தைச் சேர்ந்த ராம் நிவாஸ் நக்ஷா என்பவரின் மூன்று வயது மகன் ரோஷன் குமார் என்பவன், விளையாடிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தான். அதேபோல், அமோர்ஜா கிராமத்தில் எட்டு வயது சிறுவன் லாவ்குஷ் குமார் மின்னல் தாக்கி இறந்தான்.

மூலக்கதை