சீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் பங்கேற்ற பட்டமளிப்பு விழா

தினமலர்  தினமலர்
சீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் பங்கேற்ற பட்டமளிப்பு விழா

பெய்ஜிங்: உலகமே கோவிட் பரவலில் சிக்கித் தவித்து வரும் இச்சூழலில், சீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளி இன்றி சுமார் 11 ஆயிரம் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ளனர்.

உலகில் முதன்முதலாக மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகரான வூஹான் நகரில் கோவிட்-19 வைரஸ் கண்டறியப்பட்டது. அது, பின்னாளில் உலகம் முழுவதும் பரவி, கோடிக்கணக்கானோரை பாதித்தது அனைவரும் அறிந்ததே. இந்த வைரஸ் பரவலை தடுக்க, முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என உலக நாடுகள் அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், சீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளி இன்றி 11 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வீடியோவில், மிகப்பெரிய மைதானத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் ஒருசில மாணவர்கள் தவிர மற்ற அனைவரும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியின்றி அமர்ந்திருப்பது போன்று இடம்பெற்றுள்ளது. இதனால், அங்கு மீண்டும் கோவிட் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை