ஹங்கேரியை பந்தாடியது போர்ச்சுக்கல்

தினகரன்  தினகரன்
ஹங்கேரியை பந்தாடியது போர்ச்சுக்கல்

புடாபெஸ்ட்டில் (ஹங்கேரி) நடந்த மற்றொரு போட்டியில் போர்ச்சுக்கல் 3-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தி, வெற்றி பெற்றது. இப்போட்டியில் அபாரமாக ஆடிய நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2 கோல்களை அடித்து அசத்தினார். நடப்பு யூரோ சாம்பியனான போர்ச்சுக்கலை, இப்போட்டியில் ஹங்கேரி அணி ஆட்டத்தின் 86வது நிமிடம் வரை கோல் போட விடவில்லை. அதுவரை ஹங்கேரியின் வீரர்கள் திறமையாக ஆடினர். முதல் கோலை 86வது நிமிடத்தில் போர்ச்சுக்கல்லின் முன்கள வீரர் ராப்ஃபெல் அடித்தார். அதன் பின்னர் ஹங்கேரி வீரர்கள் சொதப்பினர். இதன் விளைவாக போர்ச்சுக்கல்லுக்கு பெனால்டி ஷாட் கிடைத்தது. அதை கிறிஸ்டியானோ ரொனால்டோ, அழகான கோலாக மாற்றினார். தொடர்ந்து ஒரு அருமையான ஃபீல்ட் கோல் அடித்து, 3-0 என்ற கோல் கணக்கில் அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

மூலக்கதை