கொலம்பியா நாட்டின் ராணுவ தளத்தில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர்கள் 34 பேர் உள்பட 36 பேர்

தினகரன்  தினகரன்
கொலம்பியா நாட்டின் ராணுவ தளத்தில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர்கள் 34 பேர் உள்பட 36 பேர்

கொலம்பியா: கொலம்பியா நாட்டில் ராணுவ தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 36 பேர் படுகாயமடைந்தனர். கொலம்பியா நாட்டில் அரசுப்படையினருக்கும், தேசிய விடுதலை ராணுவம் என்ற இடதுசாரி போராளிகள் அமைப்பிற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. ராணுவத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் குகுடா நகரில் உள்ள ராணுவ தளத்திற்குள் இன்று கார் ஒன்று நுழைந்தது. ராணுவ உடையணிந்த 2 பேர் அந்த காரை ராணுவ தளத்திற்குள் நிறுத்திவிட்டு தப்பிச்சென்றனர்.ராணுவ தளத்திற்குள் நிறுத்தப்பட்ட சில நிமிடங்களில் அந்த காரில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்துச்சிதறியது. இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் ராணுவ வீரர்கள் 34 பேர் உள்பட 36 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, காயமடைந்த அனைவரும் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்தவர்கள் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளனர். ராணுவ தளம் மீது இடதுசாரி கிளர்ச்சியாளர்கள் அமைப்பினரே இந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தியுள்ளதாக கொலம்பியா பாதுகாப்புத்துறை மந்திரி டிகோ மலோனா குற்றஞ்சாட்டியுள்ளார்.

மூலக்கதை