'ஹால் மார்க்' முத்திரை: இன்று முதல் கட்டாயம்

தினமலர்  தினமலர்
ஹால் மார்க் முத்திரை: இன்று முதல் கட்டாயம்

புதுடில்லி : தங்க நகையின் தரத்தை குறிக்கும் 'ஹால் மார்க்' முத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 256 மாவட்டங்களில் இன்று (ஜூன் 16) முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.

தங்க நகைகள் 2021ம் ஆண்டு ஜனவரி 15 முதல் 'ஹால் மார்க்' முத்திரையுடன்தான் விற்க வேண்டும் என 2019ம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசு அறிவித்து இருந்தது. கொரோனா பரவலால் ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தங்க நகை விற்பனையார்களுடன் ஆலோசனை நடத்தினார்.


இந்தக் கூட்டத்தில் நாடு முழுவதும் முதற்கட்டமாக 256 மாவட்டங்களில் 'ஹால் மார்க்' முத்திரையை கட்டாயமாக்க முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி உத்தரவு அமலுக்கு வந்துள்ள 256 மாவட்டங்களில் இன்று முதல் 'ஹால்மார்க்' முத்திரை கொண்ட 14, 18, 22 காரட் தங்க நகைகள் மட்டுமே விற்க வேண்டும்.

மூலக்கதை