தமிழகத்தில் அரசு பஸ்கள் இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் அரசு பஸ்கள் இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: முதலமைச்சர் மு.க ஸ்டாலினுடன் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்து போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா குறைந்து வரும் நிலையில் பேருந்து சேவைகளுக்கு தளர்வுகள் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.

மூலக்கதை