வவ்வால் உயிருடன் கூண்டில் அடைப்பு: சீனாவுக்கு எதிராக வீடியோ ஆதாரம்

தினமலர்  தினமலர்
வவ்வால் உயிருடன் கூண்டில் அடைப்பு: சீனாவுக்கு எதிராக வீடியோ ஆதாரம்

பீஜிங் : நம் அண்டை நாடான சீனாவின் வூஹானில் உள்ள ஆய்வு கூடத்தில் இருந்து, கொரோனா வைரஸ் பரவியதாக பரவலாக கூறப்பட்டு வரும் நிலையில், அங்கு, கூண்டில் வவ்வால்கள் உயிருடன் அடைக்கப்பட்டுள்ளது தொடர்பான, 'வீடியோ' வெளியாகி உள்ளது.

சீனாவின் வூஹான் நகரில், 2019 இறுதியில் கொரோனா வைரஸ் முதன்முதலில் தென்பட்டது. உலகெங்கும் பரவியுள்ள நிலையில், 'வைரஸ் பாதிப்புக்கு சீனாவே காரணம்' என, பல நாடுகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. வூஹானில் உள்ள வைரஸ் ஆய்வு கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது இந்த வைரஸ். அங்கிருந்து பல நாடுகளுக்கு பரவியதாக சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சீனா நடத்தியுள்ள உயிரி ஆயுத தாக்குதல் என்றும் கூறப்படுகிறது. வூஹான் ஆய்வு கூடத்தில், சீனாவுடன் இணைந்து, உலக சுகாதார அமைப்பு ஆய்வு செய்தது. அங்கிருந்து வைரஸ் பரவியிருக்க வாய்ப்பில்லை என, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஆனால் வூஹான் ஆய்வு கூடத்துக்கு எதிராக தொடர்ந்து பல ஆதாரங்கள், தகவல்கள் வெளிவருகின்றன.

மூலக்கதை