விக்டோரியா ஏரியில் 80 பேரை சுவைத்த ஒசாமா பின்லேடன்: கம்பெனி சொத்தாக மாறியது

தினகரன்  தினகரன்
விக்டோரியா ஏரியில் 80 பேரை சுவைத்த ஒசாமா பின்லேடன்: கம்பெனி சொத்தாக மாறியது

உகண்டா: உகண்டா நாட்டின்  விக்டோரியா ஏரியில் பல ஆண்டுகளாக ராட்சத முதலை  ஒன்று வாழ்ந்து வந்தது. 16 அடி நீளமுள்ள இந்த முதலை மக்களை கொன்று தின்று வந்ததால், அதற்கு அப்பகுதி மக்கள் ‘ஒசாமா பின்லேடன்’  என பெயர் வைத்துள்ளனர். இந்த முதலை 1991 ஆண்டு முதல்  2005ம் ஆண்டு வரை லூகானா கிராமத்தை சேர்ந்த 80  பேரை கொன்று தின்றுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு இந்த முதலையை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வனத்துறை அதிகாரிகளும், 50க்கும் மேற்பட்ட கிராம மக்களும் இணைந்து 7 நாட்கள் போராடி ஒசாமாவை பிடித்தனர்.   பின்னர், இந்த முதலை வனத்துறை அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்பட்டது. இந்த முதலைக்கு இப்போது வயது 75. இந்நிலையில், இந்த முதலை தற்போது உகண்டாவில் இயங்கி வரும், ‘க்ரோக்ஸ்  லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் சொத்தாக மாறியிருக்கிறது. முதலை தோலில் கைப்பைகள் தயாரித்து இத்தாலி, தென்கொரியா போன்ற நாடுகளுக்கு  இந்த நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது.

மூலக்கதை