தர்மசாலாவை இடிக்க பாக்., நீதிமன்றம் தடை

தினமலர்  தினமலர்
தர்மசாலாவை இடிக்க பாக்., நீதிமன்றம் தடை


இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள தர்மசாலாவை இடிக்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாரம்பரிய கட்டடங்கள் ஏராளமாக உள்ளன. இந்த வகையை சேர்ந்த கராச்சியில் உள்ள தர்மசாலா கட்டடம் இடிக்கப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலானது.தலைமை நீதிபதி குல்சார் அகமது தலைமையிலான அமர்வு முன் சமீபத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது சிறுபான்மையினருக்கான தனிநபர் வாரியத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்குமார் தரப்பில் 'தர்மசாலாவை குத்தகைக்கு விடும் உரிமையை மட்டுமே சிந்து உயர் நீதிமன்றம் வாரியத்திற்கு வழங்கி உள்ளது.'ஆனால் குத்தகைதாரர் வணிக வளாகம் கட்டுவதற்காக தர்மசாலாவை இடிக்கிறார்' என தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள் தர்மசாலாவை இடிக்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதித்தனர். இதுதொடர்பான உத்தரவு வருமாறு:

தர்மசாலா கட்டடத்தை இடிக்கும் பணிகளுக்கு தடை விதிக்கப்படுவதுடன் அந்த கட்டடம் மற்றும் நிலம் கராச்சி மாநகராட்சி கமிஷனர் வசம் ஒப்படைக்கப்படுகிறது; அவர் அதை நிர்வகிப்பார்.அந்த வளாகத்திற்குள் யாரையும் அவர் அனுமதிக்கக் கூடாது என்பதுடன் இடிக்கப்பட்ட எந்த பொருளையும் அங்கிருந்து அகற்றக் கூடாது. இதுதொடர்பான அறிக்கையை கராச்சி கமிஷனர் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

மூலக்கதை