சில்லரை விலை பணவீக்கம் 6.3 சதவீதமாக அதிகரித்தது

தினமலர்  தினமலர்
சில்லரை விலை பணவீக்கம் 6.3 சதவீதமாக அதிகரித்தது

புதுடில்லி : நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த மே மாதத்தில், 6.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, ரிசர்வ் வங்கியின் கட்டுப்படுத்த வேண்டிய இலக்கை விட அதிகமாகும். உணவுப் பொருட்கள் விலை அதிகரித்ததை அடுத்து, சில்லரை விலை பணவீக்கமும் அதிகரித்துள்ளது.
இது குறித்து, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், 4.23 சதவீதமாக இருந்த நிலையில், மே மாதத்தில், 6.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.உணவு பொருட்கள் பணவீக்கம், 5.01 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது ஏப்ரலில், 1.96 சதவீதமாக இருந்தது.இவ்வாறு தெரிவித்து உள்ளது.மத்திய அரசு, சில்லரை விலை பணவீக்கத்தை, 4 சதவீதமாக பராமரிக்கும்படி, ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தி உள்ளது.

இதில், 2 சதவீதம் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.இந்நிலையில், மே மாதத்தில், வரம்பை தாண்டி சென்றுள்ளது. இந்த நிதியாண்டில் சில்லரை விலை பணவீக்கம், 5.1 சதவீதமாக இருக்கும் என்றும்; முதல் காலாண்டில், 5.2 சதவீதமாக இருக்கும் என்றும் எதிர்ப்பார்ப்பதாக, ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை