தொடர் பங்கு வெளியீட்டில் ‘ருச்சி சோயா’ நிறுவனம்

தினமலர்  தினமலர்
தொடர் பங்கு வெளியீட்டில் ‘ருச்சி சோயா’ நிறுவனம்

புதுடில்லி : பாபா ராம்தேவின் ‘ருச்சி சோயா’ நிறுவனம், தொடர் பங்கு வெளியீட்டின் வாயிலாக 4,300 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது.

‘பதஞ்சலி ஆயுர்வேதா’வுக்கு சொந்தமான சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனமான ருச்சி சோயா, இந்த தொடர் பங்கு வெளியீட்டுக்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தில், குறைந்தபட்சம் 25 சதவீத பங்குகள் பொதுவில் இருக்க வேண்டும் என்ற செபியின் விதிமுறைக்கு ஏற்ப, இந்த தொடர் பங்கு வெளியீட்டு முயற்சியில் ருச்சி சோயா இறங்கி உள்ளது.இதற்காக, கடந்த சனிக்கிழமையன்று செபிக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தொடர்பங்கு வெளியீட்டில், நிறுவனத்தின் புரொமோட்டர்கள் குறைந்தபட்சம் 9 சதவீதம் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறார்கள். இவர்கள் வசம், தற்போது 98.90 சதவீத பங்குகள் உள்ளன. செபி விதிப்படி, மூன்று ஆண்டுகளுக்குள்ளாக, புரொமோட்டர்கள் தங்கள் பங்கின் அளவை 75 சதவீதமாக குறைத்துக் கொள்ள வேண்டும்.இந்நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 36 ஆயிரத்து 800 கோடி ரூபாய் ஆகும்.

மூலக்கதை