உலக மக்கள் தொகையில் 12% பேருக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது: உலக சுகாதார அமைப்பு வேதனை

தினமலர்  தினமலர்
உலக மக்கள் தொகையில் 12% பேருக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது: உலக சுகாதார அமைப்பு வேதனை

ஜெனிவா: உலக மக்கள் தொகையில் இதுவரை வெறும் 12 சதவீதம் பேருக்குத்தான் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உலக நாடுகளில் ஜூன் 10ம் தேதி நிலவரப்படி கோவிட் தடுப்பூசி செலுத்தியிருப்பவர்களின் புள்ளி விவரம் வெளியாகி உள்ளன. அதில், ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் இதுவரை 12 சதவீதம் பேருக்கு மட்டுமே கோவிட் தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டு உள்ளது தெரியவந்து உள்ளது. அதாவது, ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் 93.20 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

மூலக்கதை