2ம் கட்ட சோதனைக்கு சீனா ஒத்துழைக்க வேண்டும்: உலக சுகாதார அமைப்பு தலைவர்

தினமலர்  தினமலர்
2ம் கட்ட சோதனைக்கு சீனா ஒத்துழைக்க வேண்டும்: உலக சுகாதார அமைப்பு தலைவர்

ஜெனீவா: கொரோனா வைரஸ் தாக்கம் உலகையே அச்சுறுத்திவரும் வைரஸ். இந்த வைரஸ் எவ்வாறு பரவியது என்று சீனாவின் வூஹான் நகரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

இதனை அடுத்து பல சீன விஞ்ஞானிகளிடம் இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வைரஸ் பரவல் குறித்த உண்மையை கண்டறிந்து உலக சுகாதார அமைப்பு உலக அரங்கில் அதனை வெளிப்படையாக ஊடகங்கள் முன்னால் தெரிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வந்தது.

வைரஸ் பரவல் குறித்த முக்கிய தகவல்களை அவ்வப்போது அதிகாரப்பூர்வ இணைய தளங்களிலிருந்து சீன கம்யூனிச அரசு மறைத்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் சீன அரசு எப்போதும் வைரஸ் பரவல் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக சீன வெளியுறவுத் துறை தெரிவித்திருந்தது.தற்போது இதுகுறித்துப் பேட்டியளித்த உலக சுகாதார அமைப்புத் தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியேசஸ் முதற்கட்ட வைரஸ் பரவல் குறித்த சோதனை முடிந்துவிட்ட நிலையில் வூஹான் நகரில் இரண்டாம் கட்ட சோதனை நடைபெற உள்ளது என்றும் இதற்கு சீன கம்யூனிச அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மூலக்கதை