‘டோட்லா டெய்ரி’ நிறுவனம் பங்கு விலையை அறிவித்தது

தினமலர்  தினமலர்
‘டோட்லா டெய்ரி’ நிறுவனம் பங்கு விலையை அறிவித்தது

புதுடில்லி:முன்னணி பால் நிறுவனங்களில் ஒன்றான, ‘டோட்லா டெய்ரி’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை முன்னிட்டு, அதன் பங்கு விலையை நிர்ணயித்து அறிவித்துள்ளது.இந்நிறுவனம், 16ம் தேதியன்று, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது.

15 சதவீதம்

இதையடுத்து பங்கின் விலையை, 421 – 428 ரூபாய் என நிர்ணயித்து அறிவித்து உள்ளது. இந்த பங்கு வெளியீடு, 16ம் தேதி துவங்கி, 18ம் தேதியன்று முடிவடைகிறது.பங்கு வெளியீட்டின் போது, 50 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; பங்குதாரர்கள் வசம் இருக்கும் 1.10 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய இருக்கிறது.

மேலும் இதன் வாயிலாக இந்நிறுவனம், 520.17 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டு உள்ளது. பங்கு வெளியீட்டின் போது, 50 சதவீத பங்குகள் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கும்; 35 சதவீதம் சில்லரை முதலீட்டாளர்களுக்கும்; 15 சதவீத பங்குகள் நிறுவனங்கள் அல்லாத முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

திட்டம்

திரட்டப்படும் நிதியை, குறிப்பிட்ட சில கடன்களை அடைக்கவும்; மூலதன செலவு தேவைகளுக்கும்; பொதுவான நிர்வாக தேவைகளுக்கும் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டை பொறுத்தவரை, கென்யா, உகாண்டா ஆகிய நாடுகளில் கால் பதித்துள்ளது.

மூலக்கதை