கொரோனா பாதிப்பை மீறி ‘சென்செக்ஸ்’ சாதனை பயணம்

தினமலர்  தினமலர்
கொரோனா பாதிப்பை மீறி ‘சென்செக்ஸ்’ சாதனை பயணம்

மும்பை:நடப்பு ஆண்டில், கொரோனா இரண்டாவது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற நிலையிலும், பங்குச் சந்தைகள் எழுச்சியுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

அந்த வகையில், நடப்பு ஆண்டில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’ படைத்த சாதனைகள் குறித்து ஒரு பார்வை:

* ஜனவரி 21ம் தேதியன்று, வர்த்தகத்தின் இடையே முதன் முதலாக, 50 ஆயிரம் புள்ளிகள் என்ற உச்சத்தை தொட்டது

* பிப்ரவரி 3ம் தேதியன்று முதல் முறையாக, 50 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சென்று முடிவுற்றது

* பிப்ரவரி 5ம் தேதியன்று முதன் முறையாக, வர்த்தகத்தின் இடையே, 51 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

* பிப்ரவரி 8ம் தேதி வர்த்தகத்தின் முடிவில், 51 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் தொட்டு நிலைபெற்றது

* பிப்ரவரி 15ம் தேதியன்று, முதன் முறையாக, 52 ஆயிரம் புள்ளிகளை தாண்டி சாதனை படைத்தது

* மே 24ம் தேதியன்று, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு, 3 லட்சம் கோடி டாலர் என்ற உச்சத்தை தொட்டது

* ஜூன் 11ம் தேதியன்று, இதுவரை எட்டாத உயரமான, 52 ஆயிரத்து, 641 புள்ளிகளை, வர்த்தகத்தின் இடையே தொட்டது. சந்தையின் முடிவில், 52 ஆயிரத்து, 474 புள்ளிகள் எனும் வரலாற்று உயர்வில் நிலைபெற்றது.

* நடப்பு ஆண்டில், கடந்த 11ம் தேதி வரையிலான காலத்தில் சென்செக்ஸ், 9.89 சதவீதம் அல்லது 4,723 புள்ளிகளை லாபமாக ஈட்டியுள்ளது.

மூலக்கதை