‘அடாவடி’ சாகிப்புக்கு தடை | ஜூன் 12, 2021

தினமலர்  தினமலர்
‘அடாவடி’ சாகிப்புக்கு தடை | ஜூன் 12, 2021

தாகா: அம்பயருடன் மோதலில் ஈடுபட்டு, ‘ஸ்டம்சை’ துாக்கி வீசிய சாகிப் அல் ஹசன், நான்கு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.வங்கதேசத்தில் தாகா பிரிமியர் லீக் ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. இதில் அபானி அணிக்கு எதிரான போட்டியில், முகமதன் ஸ்போர்ட்டிங் கிளப் கேப்டன் சாகிப் அல் ஹசன், அம்பயருடன் மோதலில் ஈடுபட்டார்.

முதன் முறை ‘ஸ்டம்சை’ காலால் எட்டி உதைத்தார். அடுத்த முறை அம்பயரை நோக்கி வந்து, அருகில் இருந்த ‘ஸ்டம்சை’ துாக்கி வீசி எறிந்தார். தவிர, பெவிலியன் திரும்பியபோது அபானி அணி பயிற்சியாளர், வங்கதேச கிரிக்கெட் போர்டு இயக்குனர் காலித் மக்மூத்திடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டார்.

இவ்விஷயத்தில் சாகிப்புக்கு நான்கு போட்டிகளில் பங்கேற்க தடை விதிப்பதாக முகமதன் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. தவிர அம்பயர் அறிக்கைக்குப் பின், தாகா கிரிக்கெட் கமிட்டி இதுகுறித்து ஆராய்ந்து, இறுதி முடிவெடுக்க உள்ளது. 

மூலக்கதை