பவுலிங்கில் கூடுதல் கவனம்: ஹர்திக் பாண்ட்யா உற்சாகம் | ஜூன் 12, 2021

தினமலர்  தினமலர்
பவுலிங்கில் கூடுதல் கவனம்: ஹர்திக் பாண்ட்யா உற்சாகம் | ஜூன் 12, 2021

புதுடில்லி: ‘‘உலக கோப்பை தொடருக்காக பவுலிங்கில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன்,’’ என, ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் ‘ஆல்–ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா 27. கடந்த 2019ல் முதுகுப்பகுதி காயத்துக்கு ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்ட இவர், நிறைய போட்டிகளில் ‘பவுலிங்’ செய்யவில்லை. பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறங்கினார். கடைசியாக, கடந்த மார்ச் 28ல் புனேயில் நடந்த இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 9 ஓவர் வீசினார்.

இந்தியாவில், வரும் அக்டோபர்–நவம்பர் மாதங்களில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க ‘பவுலிங்’ பயிற்சி மேற்கொள்ள உள்ளார் ஹர்திக் பாண்ட்யா.

இதுகுறித்து பாண்ட்யா கூறுகையில், ‘‘அடுத்து நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் ‘பவுலிங்’ செய்ய விரும்புகிறேன். இதற்காக முயற்சிக்க உள்ளேன். என்னால் முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எனது முழு கவனமும் உலக கோப்பை மீது தான் உள்ளது. எனது உடற்தகுதியை பொறுத்து போட்டியில் பந்துவீசுவேன். ‘ஆப்பரேஷனுக்கு’ பின்னும் எனது ‘வேகம்’ குறையவில்லை. போட்டியில் 100 சதவீத உடற்தகுதியுடன் விளையாட மட்டுமே பிடிக்கும்,’’ என்றார்.

மூலக்கதை