நில அபகரிப்பு புகார் எதிரொலி: தெலங்கானா எம்எல்ஏ ராஜினாமா

தினகரன்  தினகரன்
நில அபகரிப்பு புகார் எதிரொலி: தெலங்கானா எம்எல்ஏ ராஜினாமா

ஐதராபாத்: தெலங்கானா ராஷ்டிரிய சமதி கட்சி மூத்த தலைவரும், மாநில முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான எட்டாலா ராஜேந்தர், தனது எம்எல்ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த மாதம் எட்டாலா ராஜேந்தர் மீதான நில அபகரிப்பு புகாரை விசாரிக்க முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்ட நிலையில், அவர் சுகாதாரத்துறை அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகவும், அதற்கான கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவரிடம் இன்று தரவுள்ளதாகவும் அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், அவர் விரைவில் டெல்லி சென்று பாஜக தலைவர்கள் முன்னிலையில், அக்கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை