‘‘எங்களையா வேட்டையாட வர்ற..?’’ எருமை மாடுகள் ‘ரவுண்டு’ கட்டியதில் சிறுத்தை ‘சரண்டர்’

தினகரன்  தினகரன்
‘‘எங்களையா வேட்டையாட வர்ற..?’’ எருமை மாடுகள் ‘ரவுண்டு’ கட்டியதில் சிறுத்தை ‘சரண்டர்’

திருமலை: தெலங்கானா மாநிலம் மெகபூப்நகர் மாவட்டம் கொயிலகொண்டா மண்டலம் புருகபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நமாஸ். விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் எருமை மாடுகளை வளர்த்து வருகிறார். தினந்ேதாறும் எருமைகள் காலையில் இருந்து மாலை வரை நிலத்தில் மேய்ச்சலுக்காக அவிழ்த்துவிடப்படும். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மேய்ச்சலுக்கு அவிழ்த்துவிடப்பட்டிருந்தது. அப்போது, அங்கு அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறி சிறுத்தை ஒன்று வந்தது. தொடர்ந்து, சிறுத்தை எருமைகளை தாக்கி வேட்டையாட முயன்றது. அப்போது, எருமைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து சிறுத்தையை சுற்றிவளைத்து முட்டித்தள்ளியது. இதில், சிறுத்தை கீழே விழுந்ததால் எருமை மாடுகள் அதனை ஆக்ரோஷமாக மிதித்தன. இதைக்கண்டு ஓடிவந்த விவசாயி நாமஸ், எருமைகளை வெளியேற்றினார். தொடர்ந்து, சிறுத்தை அசையாத நிலையில் மயங்கியதால் உடனடியாக கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த போலீசார், வனத்துறையினர் சிறுத்தைக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கினர். பின்னர் சிறுத்தையை ஐதராபாத் மிருகக்காட்சி சாலைக்கு கூண்டில் அடைத்து கொண்டு சென்றனர்.

மூலக்கதை