கேரளாவில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு: கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை

தினகரன்  தினகரன்
கேரளாவில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு: கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவலை ெபருமளவு கட்டுப்படுத்தும் வகையில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் ெகாரோனாவின் 2வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா உறுதிப்படுத்தல் வீதத்தை (டிபிஆர்) பெருமளவு குறைக்கும் ஒரு நடவடிக்கையாக இன்றும், நாளையும் மாநிலத்தில் மும்மடங்கு ஊரடங்கை போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்காக கூடுதல் போலீசார், ஆங்காங்கே பேரிகார்டுகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளர். இதுபோல அதிக பாதிப்பு உள்ள பகுதிகள் மூடப்பட்டு, டிரோன் மூலம் கண்காணிக்கப்படும். மேலும் அங்குள்ளவர்களுக்கு காவல்துறையினர் உதவுவர். இன்று மற்றும் நாளை கேரள அரசு போக்குவரத்து கழகம் நீண்ட தூர சேவைகளை இயக்காது. மிகவும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுபவர்கள் மட்டுமே வெளியே சென்றுவர அனுமதிக்கப்படுவர். அத்தியாவசிய மற்றும் சுகாதாரத்துறைகளுக்கு மட்டுமே சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஓட்டல்களில் காலை 7 முதல் இரவு 7 மணி வரை டோர் டெலிவரி மட்டுமே; பார்சல்களுக்கு அனுமதி இல்லை. உணவு, மளிகை பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பால் பூத்துகள், மீன், இறைச்சி கடைகள், கள்ளு கடைகள், பேக்கரிகள் காலை 7 முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம். முன்கூட்டியே காவல் நிலையத்தில் தெரிவித்து கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம். தேவையின்றி வெளியே சுற்றித்திரிபவர்களை கைது செய்தல் உட்பட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவர்களது வாகனம் பறிமுதல் செய்யப்படும். கேரளா முதலிடம்நாடு முழுவதும் மாநிலங்களுக்கு 25.60 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலேயே கேரளாவில் ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் தடுப்பூசி போட்டு கொள்கின்றனர். கேரளாவில் 1,000 ஆண்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும்போது, பெண்களில் 1,087 பேர் தடுப்பூசி போட்டு கொள்கின்றனர். இதில் தேசிய சராசரி 854 ஆகும். கேரளாவிற்கு அடுத்த படியாக சத்தீஸ்கர் மாநிலத்தில் 1,000 ஆண்களுக்கு 1,045 பெண்கள் தடுப்பூசி போட்டு கொள்கின்றனர். தமிழகத்தில் தடுப்பூசி போடுவதில் பெண்களிடம் ஆர்வம் குறைவாக உள்ளது. 1,000 ஆண்களுக்கு 811 பெண்கள் மட்டுமே தடுப்பூசி போடுகின்றனர்.

மூலக்கதை