டெல்லி துணிக்கடையில் பயங்கர தீ விபத்து!: 20 கடைகள் எரிந்து நாசம்...உரிமையாளர்கள் வேதனை..!!

தினகரன்  தினகரன்
டெல்லி துணிக்கடையில் பயங்கர தீ விபத்து!: 20 கடைகள் எரிந்து நாசம்...உரிமையாளர்கள் வேதனை..!!

டெல்லி: டெல்லியில் துணிக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் மொத்தம் 20 கடைகள் எரிந்து நாசமடைந்தன. கொரோனா 2ம் அலை காரணமாக டெல்லியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி வருகிறது. இதனால் டெல்லியில் உள்ள அனைத்து கடைகளும் சில விதிமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி ஒன்றரை மாத காலம் மூடப்பட்டிருந்த லாஜ்பாத் நகரில் உள்ள சென்ட்ரல் மார்க்கெட் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில் இங்குள்ள துணி கடை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியே புகை மூட்டத்தால் சூழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், 30 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் துணிக்கடையில் ஏற்பட்ட தீ மளமளவென மற்ற கடைகளுக்கும் பரவி பெரும்  பொருள் இழப்பை ஏற்படுத்தியது. இந்த தீ விபத்தில் 20 கடைகள் எரிந்து நாசமடைந்தன. இதனால் கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாமல் தவித்த கடை உரிமையாளர்கள் வேதனைக்கு ஆடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மூலக்கதை