பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர்; நடாலை வீழ்த்தி பைனலுக்கு நுழைந்த ஜோகோவிச்: 4.11 மணி நேரம் போராடி வென்றார்

தினகரன்  தினகரன்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர்; நடாலை வீழ்த்தி பைனலுக்கு நுழைந்த ஜோகோவிச்: 4.11 மணி நேரம் போராடி வென்றார்

பாரீஸ்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களின் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த அரையிறுதி போட்டி ஒன்றில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (34), 3ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடாலை ((35) எதிர்கொண்டார்.  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த இந்த போட்டியில் முதல் செட்டை 6-3 என நடால் கைப்பற்றினார். 2வது சுற்றில் சுதாரித்து ஆடிய  ஜோகோவிச் அதே6-3 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார். டைப்ரேக்கர் வரை சென்ற 3வது செட்டை 7(7)-6)4) என்ற செட் கணக்கில் ஜோகோவிச் தன்வசப்படுத்தினார். 4வது  செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-2 என கைப்பற்றினார். முடிவில்3-6, 6-3, 7-6 (7/4), 6-2 என   வெற்றி பெற்ற ஜோகோவிச் பைனலுக்குள் நுழைந்தார்.  இந்த போட்டி  4 மணி நேரம் 11 நிமிடங்கள் நீடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்தமுறை பைனலில் நடாலிடம் அடைந்த தோல்விக்கு ஜோகோவிச் பழிதீர்த்துக்கொண்டார். ஜோகோவிச் பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இது 6வது முறையாகும். முன்னதாக நடந்த மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் 5ம் நிலை வீரராக கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 6-3, 6-3, 4-6, 4-6, 6-3 என்ற  செட் கணக்கில், 6ம் நிலை வீரராக ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தினார். நாளை மாலை நடைபெறும் இறுதி போட்டியில் ஜோகோவிச்-சிட்சிபாஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில், செக் குடியரசை சேர்ந்த பார்போரா கிரெஜ்சிகோவா-ரஷ்யாவின்அனஸ்தசியா மோதுகின்றனர்.

மூலக்கதை