போதை நண்பர்களால் பலாத்காரத்துக்கு ஆளான இளம்பெண்; தவறை உணர்ந்துவிட்டேன்... ஐ லவ் யூ அப்பா..! தூக்கிட்டு தற்கொலை செய்யும் முன் வீடியோவில் உருக்கம்

தினகரன்  தினகரன்
போதை நண்பர்களால் பலாத்காரத்துக்கு ஆளான இளம்பெண்; தவறை உணர்ந்துவிட்டேன்... ஐ லவ் யூ அப்பா..! தூக்கிட்டு தற்கொலை செய்யும் முன் வீடியோவில் உருக்கம்

வதோதரா: குஜராத்தில் போதை நண்பர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான இளம்பெண், தூக்கிட்டு தற்கொலை செய்யும் முன் தனது தந்தை குறித்து வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலம் வதோதரா அடுத்த  லக்ஷ்மிபுரா பகுதியில் வசித்த  19 வயது  இளம்பெண், அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கல்லூரி படிப்பை படித்துக் கொண்டே பணிபுரிந்து  வந்தார். இவர் மாநில அளவிலான கபடி வீராங்கனை. இவரது தாய் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றியதால், அதே பகுதியில் வீடு ஒன்றை வாடகை எடுத்து தனிமையில் வசித்து வந்தார். இவர், ஆண் நண்பர்களுடன் நன்றாக பழகக் கூடியவர். இந்நிலையில், அவருடன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய 2 இளைஞர்கள் மற்றும் மற்றொரு இளம்பெண்ணும் அந்த இளம் பெண்ணின் வீட்டிற்கு வந்தனர். பின்னர், அவர்கள் ஒன்றாக சேர்ந்து மது குடித்துவிட்டு டிபன் சாப்பிட்டனர். இரண்டு இளைஞர்களின் ஒருவனான திஷாந்த் கஹார் என்பவன், மதுபோதையில் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தான். சில மணி நேரங்கள் கழித்து மூவரும் கிளம்பிவிட்டனர். இரவில் என்ன நடந்தது என்று அடுத்த நாள் காலை யோசித்து பார்த்த அந்த இளம்பெண், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்தாள். இதனால் மனமுடைந்த அந்த இளம்பெண், மற்ற சில நண்பர்களிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். அவர்கள் போலீசில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர். ஆனால் விரக்தியடைந்த இளம்பெண், வெளியே சொல்ல முடியாமல் அழுது புலம்பினார். ஒரு நாள் கழித்து, தனது தந்தை வசித்து வந்த வீட்டிற்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த லக்ஷ்மிபுரா போலீசார் அந்த இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மேற்கண்ட சம்பவங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை உறுதி செய்தனர். அதையடுத்து சட்டப்பிரிவு 376, 306 மற்றும் 114 இன் கீழ் வழக்குப் பதிவு செய்து, திஷாந்த் கஹார் மற்றும் நசீம் மிர்சா ஆகிய இருவரையும் செய்தனர். இவர்களுடன் இருந்த மற்றொரு இளம்பெண்ணை போலீசார் தேடதொடங்கியுள்ளனர். இதற்கிடையே, தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணின் செல்போனில் இருந்த வீடியோவை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்ததில், அந்த இளம்பெண் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், வீடியோ ஒன்றில் தனது நண்பர் ஒருவருடன் பேசுவதை பதிவு செய்துள்ளார்.  அந்த வீடியோவில், ‘என் தந்தையிடம் என்னால் எப்படி பேச முடியும்? அப்பா, என்னுடைய தவறை உணர்ந்துவிட்டேன். ஐ லவ் யூ, அப்பா’ என்று கூறியுள்ளார்.  இச்சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இவரது தாய் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றியதால், அதே பகுதியில் வீடு ஒன்றை வாடகை எடுத்து தனிமையில் வசித்து வந்தார்.

மூலக்கதை