பெண்கள் விடுதியில் 2 சிறுமிகள் பலாத்காரம்: 11 பேர் கொண்ட குழு விசாரணை

தினகரன்  தினகரன்
பெண்கள் விடுதியில் 2 சிறுமிகள் பலாத்காரம்: 11 பேர் கொண்ட குழு விசாரணை

ஜாம்ஷெட்பூர்: ஜாம்ஷெட்பூரில் உள்ள பெண்கள் விடுதியில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து 11 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் அடுத்த டெல்கோ காவல் நிலைய பகுதியில் மதர் தெரசா அறக்கட்டளையின் பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்குள்ள இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்க ஆளானதாக புகார் எழுந்தது. அதையடுத்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த 11 பேர் கொண்ட குழுவை ஜாம்ஷெட்பூர் துணை ஆணையர் சூரஜ் குமார் அமைத்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் அவர் கூறுகையில், ‘பாலியல் புகார் வந்ததால் விடுதியில் தங்கியிருந்த 40 சிறுமிகள் மற்றும் பெண்கள் ‘பால் கல்யாண் ஆசிரமம்’ என்ற மற்றொரு இடத்தில் தங்கவைத்துள்ளோம். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அறக்கட்டளையின் இயக்குநருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் தலைமறைவாக உள்ளார். மாவட்டத்தின் குழந்தைகள் நலக் குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது’ என்றார்.

மூலக்கதை