சீனாவின் அராஜகத்தை எதிர்த்த இந்திய பத்திரிகையாளருக்கு புலிட்சர் விருது

தினமலர்  தினமலர்
சீனாவின் அராஜகத்தை எதிர்த்த இந்திய பத்திரிகையாளருக்கு புலிட்சர் விருது

ஜின் ஜியாங்: இந்திய வம்சாவளி கொண்ட பத்திரிகையாளரான மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் பழங்குடி இன மக்களுக்கு ஏற்படும் அவலங்கள் குறித்து அவர் எழுதிய தொடர் கட்டுரைகள் மூலமாக இந்த செய்தி உலகம் முழுவதும் வைரலானது. இந்த அவலத்தை வெளிஉலகுக்கு கொண்டுவந்த மேகாவைப் பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் பழங்குடி இன மக்களுக்கு சீன கம்யூனிச அரசு கட்டாய கருத்தடை செய்வதாகவும், தொழிலாளர் சட்டத்தை மீறி அவர்களிடம் அதிக வேலை வாங்குவதாகவும், மேகா ராஜகோபாலன் தனது கட்டுரையில் தொடர்ந்து எழுதி வந்தார். இதனையடுத்து விழித்துக்கொண்ட ஐநா ,இதுகுறித்து சீனாவிடம் விளக்கம் கேட்டது. சீனா இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்தாலும் பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் சீனாவின் இந்த மனித உரிமை மீறலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.


பழங்குடி இன மக்கள் தயாரிப்பில் உருவாக்கிய கைவினை பொருட்களை வாங்க அமெரிக்கா மறுத்தது. இது சர்வதேச அளவில் அவர்களுக்கு நீதி கிடைக்க உதவியது. இஸ்லாமிய பழங்குடி அமைப்புக்கு சீனாவில் நடக்கும் அநீதிக்கு உலகறிய செய்தவர் மேகா ராஜகோபாலனுக்கு தற்போது புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மூலக்கதை