கணவரை புறந்தள்ளிய காதலி; காதலுக்கு ‘கக்கூஸ்’ ஒரு பிரச்னையா?.. ரயிலில் மணம் முடித்த காதலன்

தினகரன்  தினகரன்
கணவரை புறந்தள்ளிய காதலி; காதலுக்கு ‘கக்கூஸ்’ ஒரு பிரச்னையா?.. ரயிலில் மணம் முடித்த காதலன்

பாட்னா: பீகாரில் திருமணமான காதலி வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் வெளியேறினார். பின்னர் அவர்கள் ரயிலில் சென்ற போது கழிப்பிடத்தின் வெளியே திருமணம் செய்து கொண்டனர். பீகார் மாநிலம் சுல்த்கஞ்ச் அடுத்த பீர்குர்டின் உதாதி கிராமத்தைச் சேர்ந்த பெண், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கிரான்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த பெண் ஏற்கனவே ஆஷ்குமார் என்ற இளைஞரை காதலித்து வந்தார். திருமணத்திற்குப் பிறகும், அந்தப் பெண் முறையாக திருமணம் செய்த கணவனை ஏற்காமல் காதலன் நினைவாகவே இருந்து வந்தார். ஒருகட்டத்தில், தனது கணவருடன் அந்த பெண் வாழ மறுத்துவிட்டார். இந்நிலையில், அந்த பெண் தனது காதலன் ஆஷ்குமாருடன் திடீரென தலைமறைவானார். இருதரப்பு பெற்றோரும் தேடி வந்தனர். இந்நிலையில், ஆஷ்குமாரும் அவரது திருமணமான காதலியும் சுல்த்கஞ்ச் ரயில் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் இருவரும் பெங்களூருவை நோக்கிச் சென்ற ரயிலில் ஏறினர். இனிமேல் விட்டால், இருவரையும் பிரித்துவிடுவார்கள் என்று முடிவு செய்து, ரயிலிலேயே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, ரயிலில் உள்ள கழிப்பறைக்கு முன்னால் நின்று கொண்டு, திருமணமான காதலிக்கு குடும்ப பாரம்பரிய முறைப்படி, நெற்றியில் குங்குமம் வைத்து மனைவியாக ஏற்றுக் கொண்டார்.ரயிலின் கழிப்பிடம் முன் திருமணம் செய்து கொண்ட இவர்களை, ரயிலில் பயணித்த பயணி ஒருவர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து அதனை சமூக ஊடகங்களில் வைரலாக்கிவிட்டார். அவர்கள் இருவரின் புகைப்படமும் வைரலாகி, தற்போது உதாதி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை