ஒன்றாக உட்கார்ந்து சரக்கு அடித்த தம்பதி: கள்ளக்காதல் சந்தேகத்தால் கத்திக்குத்து

தினகரன்  தினகரன்
ஒன்றாக உட்கார்ந்து சரக்கு அடித்த தம்பதி: கள்ளக்காதல் சந்தேகத்தால் கத்திக்குத்து

மீரட்: மீரட்டில் ஒன்றாக அமர்ந்து சரக்கு அடித்த தம்பதிக்குள் கள்ளக்காதல் விவகாரம் எழுந்ததால், மனைவியை கணவன் கத்தியால் குத்திய சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் அடுத்த பிரம்ஹாபுரி பகுதியைச் சேர்ந்த விகாஸ் என்பவருக்கும் டெல்லியைச் சேர்ந்த நேஹா என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. இவர்கள் பிரம்ஹாபுரியில் வசித்துவந்தனர். தம்பதியர் இருவருக்கும் குடிப்பழக்கம் உண்டு. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது நேஹாவின் செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபரிடம், மனைவி நேஹா கொஞ்சி கொஞ்சி பேசினார். இதனால், சந்தேகமடைந்த விகாஸ், போனில் பேசிய நபருடனான உறவு குறித்து கேள்வி எழுப்பினார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஒருகட்டத்தில் காய்கறி நறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து, நேஹாவின் கழுத்தில் விகாஸ் குத்தினார். கூக்குரலிட்ட நேஹா சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அக்கம்பக்கத்தில் இருந்த சிலர், விகாஸின் தாய்க்கு தகவல் கொடுத்தனர். அவர், சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நேஹாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவலறிந்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட கணவர் விகாஸை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சம்பவம் நடந்த போது, தம்பதியர் மது போதையில் இருந்தனர். மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது மனைவியை கத்தியால் குத்தினார். தற்போது அவரது மனைவி ஆபத்தான நிலையில் உள்ளார்’ என்றனர்.

மூலக்கதை