தொழில் துறை உற்பத்தி குறியீடு முழு தரவுகள் வெளியாகவில்லை

தினமலர்  தினமலர்
தொழில் துறை உற்பத்தி குறியீடு முழு தரவுகள் வெளியாகவில்லை

புதுடில்லி:கடந்த ஏப்ரல் மாதத்துக்கான, நாட்டின் தொழில் துறை உற்பத்தி குறியீடு குறித்த முழுமையான தரவுகளை வெளியிடாமல்,மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா பாதித்தபோதும், இதே போன்று ஏப்ரல் மாதத்துக்கான தரவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்தது. இப்போது இரண்டாவது அலையின் போதும், முழுமையான தரவுகள் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டிலும், ஏப்ரலில் ஊரடங்கு உத்தரவுகள் பல மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, தொழிற்சாலை செயல்பாடுகள் பாதிப்புக்கு உள்ளாகின.

இந்நிலையில், நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கான தொழில் துறை உற்பத்தி குறியீடு குறித்த முழுமையான தரவுகளை வெளியிடாவிட்டாலும், பகுதியளவு தரவுகள்,தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.இதன்படி, கடந்த ஏப்ரலில், தொழில் துறை உற்பத்தி குறியீடு 126.6 புள்ளிகளாக உள்ளது.

இதுவே, கடந்த ஆண்டு ஏப்ரலில் 54 புள்ளிகளாகவும்; 2019 ஏப்ரலில் 126.5 புள்ளிகளாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை