சிக்கலில் இங்கிலாந்து வீரர் | ஜூன் 08, 2021

தினமலர்  தினமலர்
சிக்கலில் இங்கிலாந்து வீரர் | ஜூன் 08, 2021

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மற்றொரு வீரர் இனவெறி புகாரில் சிக்கியுள்ளார்.

இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ராபின்சன் 27. கடந்த 2012, 2013ல் இனவெறிக்கு ஆதரவாகவும், பெண்களுக்கு எதிராகவும் சர்ச்சைக்குரிய முறையில் ‘டுவிட்டர்’ வெளியிட்டார். நியூசிலாந்துக்கு எதிரான லண்டன் டெஸ்டில் அறிமுகம் ஆனவுடன், பழைய பிரச்னை கிளம்பியது. இவர் ‘இனவெறிக்கு ஆதரவானவர்,’ அணியை விட்டு நீக்க வேண்டும்,’ என ரசிகர்கள் தெரிவித்தனர்.

இதற்கு ராபின்சன் வருத்தம் தெரிவித்த போதும், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு (இ.சி.பி.,) தடை விதித்தது. இதனிடையே மற்றொரு இங்கிலாந்து வீரர், இனவெறிக்கு ஆதரவாக முன்பு பதிவிட்ட ‘டுவிட்டரை’ தற்போது ‘விஸ்டன்’ இணையதளம் வெளியிட்டது. இதுகுறித்தும் இ.சி.பி., தற்போது விசாரிக்கிறது.

மூலக்கதை