இலங்கை வீரர்கள் சம்மதம் | ஜூன் 08, 2021

தினமலர்  தினமலர்
இலங்கை வீரர்கள் சம்மதம் | ஜூன் 08, 2021

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் போர்டு (எஸ்.எல்.சி.,) ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள 24 வீரர்களுக்கு புதிய சம்பள ஒப்பந்தம் அறிமுகம் ஆனது. மற்ற நாடுகளில் உள்ளதை விட மூன்று மடங்கு குறைவான சம்பளம் தரப்பட உள்ளது. தவிர யாருக்கு எந்த முறையில் எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை.

கடந்த ஜூன் 3, கடைசி தேதி என்ற போதும் இதை ஏற்க இலங்கை வீரர்கள் மறுத்து விட்டனர். அதேநேரம் இங்கிலாந்து மண்ணில் தலா மூன்று ‘டுவென்டி–20’, ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் (ஜூன் 18–ஜூலை 4) பங்கேற்க இலங்கை செல்ல வேண்டும் என்பதால், இத்தொடர் நடக்குமா என சந்தேகம் எழுந்தது.

தற்போது இங்கிலாந்து தொடருக்கான ஒப்பந்தத்தில் மட்டும் கையெழுத்திட்டனர். சம்பள ஒப்பந்தம் குறித்து முடிவு செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என வீரர்கள் கேட்டுள்ளனர்.

மூலக்கதை