ஐ.சி.சி., விருது யாருக்கு | ஜூன் 08, 2021

தினமலர்  தினமலர்
ஐ.சி.சி., விருது யாருக்கு | ஜூன் 08, 2021

துபாய்: ஐ.சி.சி., மாதாந்திர சிறந்த வீரர், வீராங்கனை விருதுக்கான ‘டாப்–3’ பட்டியல் வெளியானது. 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இதன்படி, கடந்த மே மாதம் அசத்திய ‘டாப்–3’ வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலை ஐ.சி.சி., வெளியிட்டது. இதன் படி பாகிஸ்தானின் ஹசன் அலி (2 டெஸ்ட், 14 விக்.,), இலங்கையின் ஜெயவிக்ரமா (1 டெஸ்ட், 11 விக்.,), இலங்கைக்கு எதிரான 2வ ஒருநாள் போட்டியில் சதம் அடித்த வங்கதேசத்தின் முஷ்பிகுர் ரகிம் (125 ரன்) என மூன்று வீரர்களும் இந்திய துணைக் கண்டத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். 

‘டாப்–3’ வீராங்கனைகளாக கேத்தரின் பிரைஸ் (ஸ்காட்லாந்து), கேபி லீவிஸ், லீ பால் (அயர்லாந்து) இடம் பெற்றுள்ளனர். இதில் இருந்து சிறந்த வீரர், வீராங்கனை தேர்வு செய்யப்படுவர். 

மூலக்கதை